ஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு

0 4242
ஜன. 1 ஆம் தேதி முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால், ஜனவரி 1 ஆம் தேதி முதல், அரசு அலுவலகங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் சனிக்கிழமை உள்பட 6 நாட்கள் இயங்கி வருவதாக கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் இனி,100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து அரசு அலுவலகங் களும் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments