நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு நடவடிக்கை

0 1284
நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு நடவடிக்கை

நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு, இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள்ளது. 

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டதும் நாடு முழுவதும் உள்ள, அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்புத் திட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசே செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தடுப்பூசிகளை மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து விநியோகிக்கும் எனவும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தனிப்பாதைகள் வகுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, தடுப்பூசி தயாரானதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய, முதல் 30 கோடி பேரை அடையாளம் காணும் பணியையும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு உதவியுடன் மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி, சுமார் ஒரு கோடி மருத்துவ பணியாளர்கள், 2 கோடிக்கும் அதிகமான காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முதல்நிலை பணியாளர்கள், 50 வயதை தாண்டிய 26 கோடி பேர் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட 50 லட்சம் பேர் என, நான்கு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசியை செலுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இப்பணிகள் அடுத்த மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு, இறுதிப் பட்டியலில் இடம்பெறுபவர்களை ஆதார் அட்டைகளின் அடிப்படையில் இணைக்கப்பட உள்ளனர். தடுப்பூசி போடும் பணியாளர்களுக்கு ஆன்லைன் வழியாக பயிற்சி அளிக்கவும், வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments