மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 27ம் தேதி முதல் தொடக்கம்

0 492
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 27ம் தேதி முதல் தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 27ம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்குகிறது.

தமிழகத்திலுள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 3,600 எம்பிபிஎஸ் இடங்களும், ஒரு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்களும் உள்ளன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் சுமார் 550 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 15 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன.

இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெற உள்ளது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ மாணவிகள் www.mcc.nic.in என்ற இணையதளத்தில் 27 முதல் நவம்பர் 2 வரை பதிவு செய்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments