ஐ.பி.எல். இன்றைய போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதல்... பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் சென்னை அணி நீடிக்குமா என எதிர்பார்ப்பு

0 3371
ஐ.பி.எல். இன்றைய போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதல்... பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் சென்னை அணி நீடிக்குமா என எதிர்பார்ப்பு

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.

ஷார்ஜாவில் நடைபெற உள்ள இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 3வது இடத்திலும், 3 வெற்றிகளுடன் சென்னை அணி கடைசி இடத்திலும் உள்ளது.

மீதமுள்ள 4 லீக் போட்டிகளிலும் வென்றால் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற ஓரளவு வாய்ப்புள்ளதால், சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

முன்னதாக இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் சென்னை வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க மும்பை அணி தீவிரம் காட்டி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments