உள்நாட்டுத் தயாரிப்பான கோவாக்சின் மூன்றாம் கட்டப் பரிசோதனைக்கு அனுமதி.. நாடு முழுவதும் 28 ஆயிரம் தன்னார்வலர்களை ஈடுபடுத்த ஏற்பாடு

0 1264
உள்நாட்டுத் தயாரிப்பான கோவாக்சின் மூன்றாம் கட்டப் பரிசோதனைக்கு அனுமதி.. நாடு முழுவதும் 28 ஆயிரம் தன்னார்வலர்களை ஈடுபடுத்த ஏற்பாடு

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை, 3ம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்த தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு கட்ட மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரசை செயலிழக்கச் செய்வதில் கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள 3ம் கட்ட பரிசோதனையில், சுமார் 28 ஆயிரம் பேர் பங்கேற்பர் எனக் கூறப்படுகிறது. 19 நகரங்களில் நடைபெற உள்ள பரிசோதனையில், தன்னார்வலர்களுக்கு 28 நாட்கள் இடைவெளியில், 2 முறை கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments