பெரம்பூர் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்த பெண் உயிரிழப்பு

0 11117
பெரம்பூர் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி, சாலையில் விழுந்த பெண் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் சென்ற போது சென்னை பெரம்பூர் மேம்பாலத்தின் மேல் இருந்து கீழே சாலையில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

விமான நிலைய சுங்கத் துறையில் பணிபுரிந்து வரும் திருவொற்றியூரைச் சேர்ந்த பாலாஜி இருசக்கர வாகனத்தில் மனைவி உஷாவுடன் பெரம்பூர் மேம்பாலத்தில் ஐசிஎப் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாலத்தின் வளைவு பகுதியில், திரும்பும்போது தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதி இருவரும் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து சாலையில் கீழே விழுந்தனர்.

மேலே இருந்து சாலையில் விழுந்த உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் பாலாஜிக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில். சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தின் தடுப்பு சுவர் இரண்டு அடி மட்டுமே இருப்பதால் இது போன்ற விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments