கட்சிக் கொடியேற்றுவதில் திமுக அதிமுகவினரிடையிடையே வாக்குவாதம், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்

0 2668
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கட்சிக் கொடியேற்றுவதில் திமுக அதிமுகவினரிடையிலான மோதலைத் தடுக்க வந்த போலீசாருக்கும் ஆளுங்கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தடியடியில் முடிந்தது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கட்சிக் கொடியேற்றுவதில் திமுக அதிமுகவினரிடையிலான மோதலைத் தடுக்க வந்த போலீசாருக்கும் ஆளுங்கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தடியடியில் முடிந்தது.

இரு கட்சியினரும் ஒரே நேரத்தில் கொடியேற்றும் நிகழ்வை வைத்திருந்தனர். அப்போது கூடிய கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி திமுகவினரை முதலில் கொடியேற்றக் கூறியதாகவும் அப்போது எம்.எல்.ஏ சின்னப்பன் தலைமையில் வந்த அதிமுகவினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments