’எனது ஆட்சியில் 125 குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர் ’ - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

0 3050
’எனது ஆட்சியில் 125 குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர் ’ - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

தனது ஆட்சியில் 125 குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தலைநகர் லக்னோவில் நடைபெற்ற போலீஸ் நினைவு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இந்தாண்டு பணியின் போது உயிர் தியாகம் செய்த 9 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது உரையாற்றிய அவர், தனது அரசாங்கம் குற்றச் செயல்களை ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என்றார்.

குற்றச் செயல்களை தடுக்க காவலர்கள் எடுத்த கடுமையான நடவடிக்கையால் 125 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 2607 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments