பெரம்பலூரில் டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதி விபத்து - ஒருவர் பலி

0 1288
பெரம்பலூரில் டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதி விபத்து - ஒருவர் பலி

பெரம்பலூரில் திடீரென வலது புறம் திரும்பிய இருசக்கர வாகனத்தின் பின்னால் டிப்பர் லாரி மோதியதில் மின் பொறியாளர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மின்வாரியத்தில் பணிபுரிந்து வந்த அனுக்கூரைச் சேர்ந்த ராமதாஸ், நண்பர் பிரபுவுடன் இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றுள்ளார்.

பாலக்கரை ரவுண்டானா அருகே பின்னால் மிக நெருக்கமாக வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியை கவனிக்காமல், திடீரென அவர்கள் வலதுபுறமாக திரும்பினர்.

அப்போது டிப்பர் லாரி மோதி கீழே விழுந்த ராமதாஸ் மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கின.

ராமதாஸ் சிகிச்சைப் பலனின்றி இறந்த நிலையில், படுகாயங்களுடன் பிரபு சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments