"நெஞ்சைப் பிளந்தால் மோடியே இருப்பார், மோடிக்கு நான் அனுமான்" -சிராக் பாஸ்வான்

0 3136
"நெஞ்சைப் பிளந்தால் மோடியே இருப்பார், மோடிக்கு நான் அனுமான்" -சிராக் பாஸ்வான்

பிரதமர் மோடிக்கு தாம் அனுமன் போன்று விசுவாசமானவர் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

அவசியமானால் நெஞ்சைப் பிளந்து காட்டவும் தயார் என்றும் அதில் மோடிதான் இருப்பார் என்றும் அவர் கூறினார். தமக்கு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் தான் முரண்பாடே தவிர பாஜகவுடன் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சி பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனி வேட்பாளர்களை அறிவித்தது. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. சிராக் பாஸ்வானின் அறிவிப்பு வாக்காளர்களை திசைதிருப்புவதாக பாஜக அதனை நிராகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments