சட்ட ஆலோசனை நிறுவனத்தின் 38 அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

0 766
சட்ட ஆலோசனை நிறுவனத்தின் 38 அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

டெல்லி ,என்.சிஆர் மற்றும் அண்டை மாநிலமான ஹரியானாவில் வருமான வரித்துறையினர் 38 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏராளமான சொத்து பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பத்து வங்கி லாக்கர்களும் சீல் வைக்கப்பட்டன.

சட்ட ஆலோசனை நிறுவனம் நடத்தி வந்த முன்னணி வழக்கறிஞர் ஒருவர் 117 கோடி ரூபாய் வருமானம் பெற்று கணக்கில் 21 கோடியை மட்டும் காட்டியதாகவும் இன்னொரு 100 கோடி ரூபாய் வருவாயை மறைத்ததாகவும்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments