சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு-தமிழகத்திலேயே முதன்முறையாக குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

0 12859

நெல்லையில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் குற்றவாளியான பள்ளி வேன் ஓட்டுநருக்கு தமிழகத்திலேயே முதன்முறையாக சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இந்த வழக்கு தொடர்பாக 31 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், குற்றவாளியான குன்னத்தூரை சேர்ந்த பள்ளி வேன் ஓட்டுநர் பெருமாளுக்கு சாகும் வரை அதாவது இயற்கையாக மரணம் நிகழும் வரை ஆயுள் தண்டனையும், 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி இந்திராணி தீர்ப்பு அளித்தார்.

மேலும் அபராத தொகையுடன் சேர்த்து அரசு தரப்பில் 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பாதிக்கப்பட்ட சிறுமியின் காப்பாளர் வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments