தமிழகத்தில் இன்று 4410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 49பேர் உயிரிழப்பு..!

0 2552
தமிழகத்தில் இன்று 4410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில், ஒரே நாளில் மட்டும் புதிதாக 4 ஆயிரத்து 410 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய் யப்பட்டது. 12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை,
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி விட்டது.

வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 55 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 22 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் 18 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 49 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் புதிதாக ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கோவையில், மேலும் 395 பேருக்கும், செங்கல் பட்டில் புதிதாக 255 பேருக்கும் , திருவள்ளூரில் 192 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டு உ ள்ளது.

மாநிலத்தில் தனிமைப் படுத் தப் பட்டவர்கள் உள்பட சுமார் 42 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments