பல்வேறு மாநிலங்களில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறப்பு...

0 2086
ஊரடங்கில் இருந்து விலகும் 5 ம் கட்ட தளர்வுகளில் அறிவித்தபடி பல மாநிலங்களில் திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டன.

ஊரடங்கில் இருந்து விலகும் 5 ம் கட்ட தளர்வுகளில் அறிவித்தபடி பல மாநிலங்களில் திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டன.

கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் சுமார் 7 மாத காலமாக அடைந்து கிடந்தன. கடந்த ஒன்றாம் தேதி அறிவிக்கப்பட்ட 5 ஆம் கட்ட தளர்வுகளில், அக்டோபர் 15 முதல் அவற்றை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதைத் தொடர்ந்து, டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம்,அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில், திரையரங்குகள், மல்டிபிளக்சுகள் திறக்கப்பட்டுள்ளன. திரையரங்க வளாகத்தில் ஆறு அடி சமூக இடைவெளி பின்பற்றப்படவேண்டும், பார்வையாளர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏசி 24 முதல் 30 டிகிரிக்குள் வைக்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments