மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரும் வழக்கு ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

0 1076
நடப்பு ஆண்டே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கு... ஆளுநரின் செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டே அமல்படுத்த கோரிய வழக்கில், ஆளுநரின் செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ளது. இது தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் நடப்பு ஆண்டே, உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு, நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகள் வெளிவர உள்ளதாக தகவல் உள்ள நிலையில், இது குறித்து உடனடியாக முடிவெடுப்பது அவசியமானது என்றது.

ஆகவே, இது தொடர்பாக தமிழக ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பவும், இது தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டு, பிற்பகலுக்கு வழக்கை ஒத்திவைத்தனர். இந்த உத்தரவை உடனடியாக மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் வழியாக அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments