தமிழகத்தில் இன்று 4666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 2367
தமிழகத்தில் இன்று 4666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 4666 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஒரே நாளில் 85 ஆயிரத்து 509 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 5117 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா நோய் பாதிப்பால் சென்னையை சேர்ந்த 13 பேர் உள்பட மேலும் 57 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் புதிதாக 1164 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கோவையில் ஒரே நாளில் 398 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 252 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 43 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments