தூத்துக்குடி : ஆடு மேய்ப்பதில் தகராறு ; காலில் விழ வைத்த விவகாரத்தில் 7 பேர் கைது!

0 6190

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள  ஓலைகுளம் கிராமத்தில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக அதே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஓலைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர், ஆடுமேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கு என்பவரும் ஆடு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறார். இதில், பால்ராஜ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 8- ந்தேதி பால்ராஜ் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது, அவருடைய ஆடு, ‌ சிவசங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பகுதிக்குள் சென்றதாக தெரிகிறது. இதனால்,  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சிவசங்கு, பால்ராஜை தாக்கி, சாதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால்,  சிறிது நேரத்தில் சிவசங்கு மற்றும் அவரது உறவினர்கள் சிலர் பால்ராஜ் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பகுதிக்கு வந்து, தகராறில் ஈடுபட்டனர். மேலும், பால்ராஜை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். தடுக்க சென்ற பால்ராஜ் மகன் கருப்பசாமியைம் அவர்கள் தாக்கியுள்ளனர். பின்னர், காவல்துறையில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவியது.

இதை தொடர்ந்து, கயத்தாறு காவல்ததுறையினர் சிவசங்கு, சங்கிலி பாண்டியன், கார்த்திக், பெரிய மாரி, வீரய்யா, மகேந்திரன, மகாராஜன் ஆகிய 7 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செய்துள்ளனர் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் , பால்ராஜ் குடும்பத்தினருக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments