காவு வாங்கும் எலி மருந்து தொடரும் தற்கொலை நிகழ்வுகள்

0 1933
காவு வாங்கும் எலி மருந்து தொடரும் தற்கொலை நிகழ்வுகள்

பேஸ்ட் வகையிலான எலியை கொல்லும் நச்சு மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயல்வோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. காவு வாங்கும் எலி மருந்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அலசுகிறது, இந்த சிறப்புச் செய்தித் தொகுப்பு.

உலகில் சாதிக்கப் பிறந்தோம் என்பதை மறந்து, ஒரு நொடியில் சிலர், தற்கொலை எனும் தவறான முடிவு எடுத்து, உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

எலிப் பொறியில் சிக்காத எலிகளை கொல்ல கண்டுபிடிக்கப்பட்ட எலி மருந்து, இப்போது, தற்கொலைக்கு முயலுபவர்களின் ஆயுதமாக மாறி இருக்கிறது.

பவுடர் மற்றும் பேஸ்ட் வடிவங்களில் தெரு முனை கடைகளில் தாராளமாக கிடைக்கும் இந்த விஷபொருட்களை சாப்பிட்டால், கல்லீரலை தாக்கி, உடலில் ரத்தம் உறையாத தன்மையை ஏற்படுத்துகிறது.

இதயம், மூளையில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி உயிரை பறிக்கும் என எச்சரிக்கும் மருத்துவர்கள், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் எலி பேஸ்ட் சாப்பிட்டு, தற்கொலை க்கு முயலுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கவலை தெரிவிக்கிறார்கள்.

சயனைட், துத்தநாகம் சாப்பிட்டால் நொடியில் மரணம் நிச்சயம் என கூறும் மருத்துவர்கள். எலி மருந்தை பொறுத்தவரை, 4 நாட்களுக்குப் பிறகே, உடலில் நிகழும் பாதிப்பு வெளியே தெரியும் என கூறுகிறார்கள். எனவே, தமிழகத்தில் எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தமிழகத்தில், தற்கொலை செய்பவர்களில் 75 சதவீதம் பேர், எலி பேஸ்ட் என்ற நச்சு மருந்தை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்கொலை, எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு அல்ல என்பதை கவுன்சிலிங் மூலம் தவறாக முடிவு எடுப்பவர்களுக்கு விளக்கி கூறினால், விலை மதிப்பற்ற உயிர்களை நிச்சயம் காப்பாற்ற முடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments