தமிழகத்தில் இன்று 4879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 5434
தமிழகத்தில் இன்று 4879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில், 5 ஆயிரத்திற்கு மேல் இருந்து வந்த கொரோனா பாதிப்பு, முதன் முறையாக 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

ஒரே நாளில் மட்டும் புதிதாக 4 ஆயிரத்து 879 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய் யப்பட்டது. 12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை, சுமார் 25 ஆயிரம் பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதேநேரம், வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 165 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.சென்னையில் 13 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 62 பேர் உயிரிழந்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், ஒருவர், வேலூர் தனியார் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னையில் புதிதாக ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கோவையில், மேலும் 393 பேருக்கும், செங்கல் பட்டில் புதிதாக 245 பேருக்கும் , திருவள்ளூரில் 229 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டு உ ள்ளது. மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 43 ஆயி ரத்து 747 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments