பூனைக்குட்டி வளர்க்க ஆசைப்பட்டு புலிக்குட்டியை வாங்கிய தம்பதி

0 2024
பூனைக்குட்டி வளர்க்க ஆசைப்பட்டு புலிக்குட்டியை வாங்கிய தம்பதி

பூனைக்குட்டியை வளர்க்க ஆசைப்பட்டு, புலிக்குட்டியை வாங்கியதால், பிரெஞ்சு தம்பதி ஒன்று போலீஸ் விசாரணையை எதிர்கொண்டுள்ளது.

நார்மண்டியைச் சேர்ந்த லா ஹவ்ரே தம்பதி ஆன்லைன் விளம்பரம் ஏற்படுத்திய ஆர்வத்தால், சவன்னா பூனை என கருதி 3 வயது குட்டி ஒன்றை இந்திய மதிப்பில் 5 லட்சம் ரூபாய் கொடுத்து 2018 ஆம் ஆண்டு வாங்கினர்.

அதன் உருவமைப்பில் ஏற்பட்ட சந்தேகத்தால், போலீசுக்கு தகவலளித்த போது தான் அது இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமத்ரான் புலி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து 2 வருட விசாரணைக்கு பிறகு, பாதுகாக்கப்பட்ட விலங்கை கடத்தியதாக 9 பேருடன் லா ஹவ்ரே தம்பதி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments