காங்., செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியில் இருந்து விலகினார் குஷ்பு

0 3382
காங்., செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியில் இருந்து விலகினார் குஷ்பு

பாஜகவில் சேர உள்ளதாகக் கூறப்படும் நடிகை குஷ்பூ, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே விலகுவதாக சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

திமுகவில் இருந்து விலகி பின்னர் காங்கிரசில் சேர்ந்த நடிகை குஷ்பூ, பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே ஊகத் தகவல்கள் உலா வந்தன. ஒரு ட்வீட்டுக்கு 2 ரூபாய் வாங்கிக் கொண்டு, தான் பாஜகவில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என குஷ்பூ குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு, திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். பாஜகவில் இணைய போகிறீர்களா? என்ற செய்தியாளர் கேள்விக்கு No comments என பதிலளித்ததோடு, காங்கிரசில் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு தாம் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி குஷ்பூவிடம் இருந்து பறிக்கப்பட்டது. அப்பதவியில் இருந்து குஷ்பூ நீக்கப்படுவதாக காங்கிரஸ் செயலாளர் பிரணவ் ஜா அறிவித்துள்ளார். அதேசமயம், காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு குஷ்பூ எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

அதில், 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவி, சரிவில் இருந்த நேரத்தில், பணம், பதவி, பெயரை எதிர்பார்க்காமல் கட்சியில் சேர்ந்ததாகவும், ஆனால் உயர்பதவிகளில் உள்ள சிலர், கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பதில்லை என்பதோடு நசுக்கப்படுவதாகவும் குஷ்பூ குற்றம்சாட்டியுள்ளார். 

கூட்டணிக் கட்சியான பாஜகவில் குஷ்பூ இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், குஷ்பூ எங்கிருந்தாலும் வாழ்க என வரவேற்பு தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால், தங்களுடைய முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் என்றும் ஜெயக்குமார் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments