ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத் - ராஜஸ்தான், மும்பை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை

0 646
ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத் - ராஜஸ்தான், மும்பை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.

துபாயில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோத உள்ளன.

6 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி 4ல் தோல்வியை சந்தித்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் மற்றொரு போட்டியில், ஸ்ரேயஸ் தலைமையிலான டெல்லி அணியை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி எதிர்கொள்கிறது.

புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் முதல் 2 இடங்களில் உள்ளதால் இந்த போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments