முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை பத்துக்கு மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

0 1346
சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன.

கொரோனா சூழலிலும் கடந்த 5 மாதங்களில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டதன் மூலம் 30 ஆயிரத்து 664 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 67ஆயிரத்து 212 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்குப் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments