ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது டெல்லி அணி

0 1599

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் அதிகபட்சமாக, ஹெட்மயர் 45 ரன்களையும், ஸ்டோய்னிஷ் 39 ரன்களை சேர்த்தனர்.இதன் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்களின் விக்கெட்டுகள், டெல்லி பந்துவீச்சில் சீட்டுக் கட்டுப் போல் சரிந்தன.

ஓரளவு தாக்குப்பிடித்த திவேதியா 38 ரன்களையும், ஜெய்ஷ்வால் 34 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 19.4 ஓவரில் 138 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments