அரசியல் தலையீடு உள்ள வழக்குகளில் மட்டுமே துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி

0 895
அரசியல் தலையீடு உள்ள வழக்குகளில் மட்டுமே துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி

கல்வித்துறையில் அரசியல் தலையீடு உள்ள சில வழக்குகளில் மட்டுமே துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கி 2018-ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தற்போது மேல்முறையீடு செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பள்ளி கல்வித்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் பல உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், 50 சதவீத வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினர். நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைபடுத்துவதில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், அபராதமும் விதிக்கப்பட வேண்டும் என்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments