கர்நாடக முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

0 4429
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

கர்நாடகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்பவும், மூடப்பட்ட பள்ளிகளைத் திறக்கவும் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், புதிதாகத் தொடங்கும் தனியார் தமிழ்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்றும் அங்குள்ள தமிழாசிரியர் சங்கம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுரங்கம், காப்பித் தோட்டம், கட்டுமானத் தொழில், வேளாண்துறை ஆகியவற்றின் மூலம் கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தமிழர்கள் பெரும்பங்காற்றியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கர்நாடகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்பவும், மூடப்பட்ட பள்ளிகளைத் திறக்கவும், புதிதாகத் தமிழ்வழிப் பள்ளிகளைத் திறக்க அங்கீகாரம், அனுமதி வழங்கவும், பிறமொழிப் பள்ளிகளாக மாற்றப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை மீண்டும் தமிழ்ப் பள்ளிகள் ஆக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments