புதுச்சேரியில் 6 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

0 11722
புதுச்சேரியில் 6 மாதங்களுக்குப் பிறகு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் மீண்டும் வகுப்புகள் துவங்கின.

புதுச்சேரியில் 6 மாதங்களுக்குப் பிறகு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் மீண்டும் வகுப்புகள் துவங்கின.

கடந்த 5ம் தேதி முதல் மாணவர்களுக்கான இருக்கைகள் தயார் செய்யும் பணி நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கான சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 3 நாட்கள், 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 3 நாட்கள் என வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது என்றும் பெற்றோர் ஒப்புதலுடனே பள்ளிகளுக்கு வர வேண்டும் எனவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments