சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு சிபிஐ நோட்டீஸ்

0 662
சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு சிபிஐ நோட்டீஸ்

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவகுமாருக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டி.கே. சிவக்குமாரின் வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியன நடத்திய சோதனையில் 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கு கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் மூலம் 175 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு முறையான கணக்கு இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்த விசாரணை சி.பி.ஐக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் டி.கே சிவகுமாருக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி 57 லட்சம் ரூபாயை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து, 2 நாட்களில் பெங்களூருவில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments