15 ஆண்டுகள் ஆகியும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு ஆய்வறிக்கை வெளியிடாதது ஏன்? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

0 724
15 ஆண்டுகள் ஆகியும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு ஆய்வறிக்கை வெளியிடாதது ஏன்? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற்று 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஏன் இதுவரை ஆய்வு அறிக்கையை வெளியிட வில்லை ஏன் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.

இதுதொடர்பாக, வழக்கறிஞர் திருமுருகன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தொல்லியல் கல்வெட்டுகளை படிமம் எடுக்கும் வசதி மைசூருவில் மட்டுமே உள்ளதாகவும், ஏன் அதன் கிளையை சென்னையில் அமைக்க கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆதிச்சநல்லூர், பொருந்தல், கொடுமணல் ஆகியவை, கி.மு 500 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், அசோகர் காலத்திற்கு முந்தையது என்பது புலனாகிறது என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments