உக்ரைனில் விமான விபத்தில் உயிரிழந்த ராணுவ பயிற்சி மாணவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி: அதிபர் வோலோடிமைர் ஜெலென்ஸ்கி பங்கேற்பு

0 728
உக்ரைனில் விமான விபத்தில் உயிரிழந்த ராணுவ பயிற்சி மாணவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி: அதிபர் வோலோடிமைர் ஜெலென்ஸ்கி பங்கேற்பு

உக்ரைனில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 25 பயிற்சி மாணவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் வோலோடிமைர் ஜெலென்ஸ்கி பங்கேற்றார்.

விமானப்படை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பயிற்சி மாணவர்களுடன் சென்ற அன்டோனோவ் ஆன் -26 விமானம், கடந்த 25ம் தேதி கார்கிவ் நகருக்கு அருகே தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

இதில் ஒருவர் மட்டும் உயிர்தப்பிய நிலையில், உயிரிழந்தவர்களில் ஒருவரின் உடல் கடந்த வாரம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மீதமுள்ள 25 பேரின் இறுதி சடங்கு நிகழ்ச்சி, கார்கிவ் சதுக்கத்தில் நடைபெற்றது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments