மஹிந்திராவின் தார் வாகனத்திற்கு மூன்றே நாட்களில் 9000 முன்பதிவுகள்

0 1457
மஹிந்திராவின் தார் வாகனத்திற்கு மூன்றே நாட்களில் 9000 முன்பதிவுகள்

கடந்த 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட 2020ம் ஆண்டின் தார் எஸ்யுவிக்கு இதுவரை 9000 முன்பதிவுகள் வந்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

இப்பொது 18 நகரங்களில் மட்டுமே தாரின் டெமோ வாகனங்கள் உள்ள நிலையில் இந்த அளவுக்கு முன்பதிவு நடந்துள்ளது.

வரும் 15 ஆம் தேதிக்குப் பிறகு மேலும் பல நகரங்களில் டெமோ வாகனங்கள் வந்தபின்னர் இந்த முன்பதிவு  பலமடங்கு அதிகரிக்கும் என மஹிந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சென்னையில் மஹிந்திரா தாரின் ஆன்ரோடு விலை 11.55 லட்சத்தில் துவங்கி 16.85 லட்சம் வரை உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments