இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

0 3133
2020ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3பேருக்கு அறிவிக்கப்பட்டது

இயற்பியலுக்கான நோபல் பரிசு, பிரிட்டனை சேர்ந்த ரோஜர் பென்ரோஸ், ஜெர்மனியை ரெயின்ஹார்டு கென்சல் (Reinhard Genzel), அமெரிக்காவை சேர்ந்த ஆண்ட்ரியா கெஸ் (Andrea Ghez) ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசை, இரண்டாகப் பிரித்து, ரோஜர் பென்ரோசுக்கு ஒரு பாதியும், ரெயின்ஹார்டு கென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு மற்றொரு பாதியும் வழங்கப்படுகிறது.

கருந்துளைகள் பற்றிய ஆய்வுக்காகவும், நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள கேலக்சியான பால்வழித் திரளின் மறைந்திருந்த ரகசியத்தை வெளிப்படுத்தியதற்காகவும் இந்த 3 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

மாபெரும் அறிவியலாளரான ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாட்டில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில், பெருநிறை கொண்ட உருக்களின் ஈர்ப்பு விளைவே கருந்துளைகள் உருவாக்கத்திற்கு வித்திடுகிறது என்ற கண்டுபிடிப்புக்காக ரோஜர் பென்ரோசுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல, நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வழித் திரளின் மையத்தில் கண்ணுக்குத்தெரியாத அதீத பெருநிறை கொண்ட அமைப்பே, நட்சத்திரங்களின் சுழற்சிக்கு காரணம் என்ற கண்டுபிடிப்புக்காக ஜெர்மனியை சேர்ந்த ரெயின்ஹார்டு கென்சல், அமெரிக்காவை சேர்ந்த ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு நோபல் பரிசின் ஒரு பாதி கூட்டாக வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments