எஸ்.ஐ தேர்வில் விசாரணை முடியும்வரை தேர்வர்களின் பட்டியலை இறுதி செய்யத் தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

0 5638
தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்வானவர்களின் பட்டியலை இறுதி செய்யவோ, பணி நியமனம் மேற்கொள்ளவோ கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்வானவர்களின் பட்டியலை இறுதி செய்யவோ, பணி நியமனம் மேற்கொள்ளவோ கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் நடந்த எஸ்.ஐக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது குறித்து 3 பேர் கொண்ட விசாரணை குழு விசாரித்து வருகிறது. அதனை எதிர்த்து வாடிப்பட்டியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக் குழு முன் மனுதாரர் ஆஜராகியுள்ளார் என்றும் அவரிடம் விசாரணை நடந்துள்ளது என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நியமனம் தொடர்பான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்றும் ஆனால், விசாரணைக் குழுவின் விசாரணை முடியும் வரை தேர்வானவர்களின் பட்டியலை இறுதி செய்யவோ, பணி நியமனம் மேற்கொள்ளவோ கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments