மல்லையாவை நாடுகடத்தும் நடவடிக்கை ரகசியமாக நடைபெறுகிறது - மத்திய அரசு

0 1707
விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் ரகசியமாக நடைபெற்று வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் ரகசியமாக நடைபெற்று வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகளிடம் கடன்பெற்று ஒன்பதாயிரம் கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா, அவர் பிள்ளைகளுக்கு 292 கோடி ரூபாயை மாற்றியது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்தத் தீர்ப்பைச் சீராய்வு செய்யக் கோரிய வழக்கில் அக்டோபர் 5ஆம் தேதி மல்லையா நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மல்லையாவை நாடுகடத்தும் நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளன என நீதிபதிகள் வினவினர்.

அதற்குப் பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், மல்லையாவை நாடுகடத்தும் நடவடிக்கைகள் ரகசியமாக நடைபெற்று வருவதாகவும், அது எந்த நிலையில் உள்ளது எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

நாடு கடத்தும் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டதா என்பதை நவம்பர் இரண்டாம் தேதி தெரிவிக்க வேண்டும் என மல்லையாவின் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments