கோவிலில் திருடி கஞ்சா வாங்குவதாகக் கூறும் சிறுவனின் வாக்குமூலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பலுக்கு வலை

0 1345
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கோவில்களில் திருடி கஞ்சா வாங்குவதாக 2 சிறுவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கோவில்களில் திருடி கஞ்சா வாங்குவதாக 2 சிறுவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சீர்காழி சுற்றுவட்டாரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. வீடியோவில் பேசும் அந்த சிறுவர்களில் ஒருவன் கையில் 500 ரூபாய் மற்றும் கஞ்சா பொட்டலத்துடன் காணப்படுகிறான்.

கோவில் ஒன்றில் சாமி சிலையின் கழுத்திலிருந்து தாலியையும் அங்கிருந்த உண்டியலையும் திருடி, விக்கி, அரவிந்தன் ஆகிய இருவரிடம் கொடுப்பேன் என்றும் அவர்கள் கை செலவுக்கு பணமும் கஞ்சாவும் கொடுப்பார்கள் என்றும் அவன் கூறுகிறான். 

சிறுவன் குறிப்பிட்ட மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்கி, அரவிந்தன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments