தலித் சமுதாய தலைவரை கொலை செய்ததாக லாலு பிரசாத்தின் 2 மகன்கள் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு

0 1852
தலித் சமுதாய தலைவரை கொலை செய்ததாக லாலு பிரசாத்தின் 2 மகன்கள் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு

தலித் சமுதாய தலைவரை கொலை செய்ததாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் 2 மகன்கள் மீது பீகாரில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்ஜேடி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் பிரிவு முன்னாள் செயலாளரான சக்தி குமார் மாலிக் நேற்று 3 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து லாலுவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் மீது மாலிக்கின் மனைவி புகார் அளித்தார்.

தமது கணவரிடம் 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறி, ஆதாரமாக வீடியோவையும் அளித்ததாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் காகத் காவல்நிலையத்தில் லாலு மகன்கள், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மருமகனும் ஆர்ஜேடி மூத்த தலைவருமான அனில்குமார் சாது உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments