மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் 490 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது

0 1866
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் 490 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் 490 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது.

கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவில் இருந்து மீண்டு வருகின்றன.

இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 494 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 191 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 136 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 553 ஆக இருந்தது. உலோகத் தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் 4 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments