கொரோனா தொற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - வினித் கோத்தாரி

0 2514
கொரோனா தொற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - வினித் கோத்தாரி

கொரோனா தொற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை, ஆயினும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலைவருமான வினித் கோத்தாரி தெரிவித்துள்ளார்.

தொற்று காரணமாகத் தடைப்பட்டிருந்த லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து பேசியவர், நீதிமன்றங்கள் மெதுவாக பணிகளை மேற்கொண்ட போதும், தொடர்ந்து நீதி வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

மாநிலம் முழுவதும் 166 அமர்வுகளில் நடந்த லோக் அதாலத்தில் 83 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 ஆயிரத்து 468 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments