மனச்சோர்வை விரட்டும் மூலிகைகள்...!

0 12986

மனச்சோர்வு, மன அழுத்தத்தை போக்கும் வல்லமை கொண்ட  மூலிகைத் தோட்டத்தை மக்கள் வீட்டிலேயே அமைப்பது  எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தமிழகத்தில் 6 மாத கொரோனா ஊரடங்கு மக்கள் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களையும் பலருக்கு மன அழுத்தங்களையும்
கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது.

இந்த மன அழுத்தத்தில் இருந்து எளிதாக விடுபட மூலிகைத்தோட்டம் உதவுகிறது. மூலிகை தாவரங்களிலிருந்து கிடைக்கப்பெறும் மருத்துவ குணம் நிறைந்த காற்று சுவாசத்துக்கு மட்டுமல்ல, அந்த மூலிகைகளை உடலுக்கும் அருமருந்தாக உட்கொள்ள முடியும்

இந்நிலையில் அரசு தோட்டக்கலை துறையானது பொதுமக்களின் உடல்நலம் கருதி வீட்டிலேயே மூலிகை தாவரங்களை வளர்த்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் மருத்துவ குணத்தை பயன்படுத்தி நாம் இழந்த வாழ்க்கையை மீட்டெடுப்பது குறித்த காணொலி காட்சி மூலம் விளக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் மருத்துவ குணம் கொண்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகை தாவரங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இதில் சித்த மருத்துவ துறையால் குறிப்பாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகை தாவரம், மருத்துவ குணம் நிறைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது.

மருத்துவ குணம் கொண்ட கீரை வகைகள், மலர்களில் இருந்து எடுக்கப்படும் சித்த மருந்துகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு பயன் தரக்கூடியவையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

குப்பைமேனி பொன்னாங்கண்ணி முடக்கத்தான் கீரை, ஆடா தொடை ஆகியவை மூட்டு வலி, உடல் வலியை நீக்கி, நுரையீரலில் சளியை வெளிக்கொண்டு வந்து உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

ஆவாரம் பூ வல்லாரை, சாமந்தி, நித்திய கல்யாணி ஆகிய மூலிகை புற்றுநோய்க்கு மருந்தாகும். தலைவலி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி குணமாக்கவும் இந்த மூலிகை தாவரம் பயன்படுகிறது.

கற்பூரவள்ளி செடி மூலம் குறட்டையை குறைக்கவும் கரிசலாங்கண்ணி தாவர மூலம் மஞ்சள் காமாலையை கட்டுப்படுத்தவும் செம்பருத்தி கரும் கூந்தல் தோல் பராமரிப்பு ஆகியவற்றுக்கு உதவி புரிகிறது.

தும்பை பூ தலைவலி காது வலியை போக்கும், கீழாநெல்லி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.கல்லீரலைப் பலப்படுத்த உதவுகின்றது.

தூதுவளை சளி இருமல் போன்றவற்றை கட்டுப்படுத்தவும், இன்சுலின் பிராண்ட் என்று சொல்லக்கூடிய தாவரம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

பிரண்டை கால்சியம் குறைபாட்டை போக்கவும் ஜீரணசக்தியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது.

இதுபோன்ற மூலிகை தாவரங்களை வீட்டிலேயே வளர்ப்பதால் மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து நாம் விடுபட முடியும் என்கின்றனர் தோட்டக் துறையினர்.

மூலிகை மருத்துவம் மகத்தானது என்றாலும் அதில் நுழைந்துள்ள போலிகளால் சில நேரங்களில் மூலிகை மருத்துவத்தை தேர்ந்தெடுக்க மக்கள் தயங்குகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments