நாட்டையே உலுக்கிய உ.பி கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவம்…சிபிஐ விசாரணைக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை

0 2616
நாட்டையே உலுக்கிய உ.பி கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவம்…சிபிஐ விசாரணைக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை

உத்திரப்பிரதேசத்தில், 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ளார்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் வழக்கை, ஹத்ராஸ் மாவட்ட போலீசார் முறையாக கையாளவில்லை என அதிருப்தி எழுந்தது.

இந்த சூழலில், ஹத்ராஸ் மாவட்ட எஸ்.பி., டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேரை, சஸ்பெண்ட் செய்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

மேலும், ஹத்ராஸ் எஸ்.பி மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட காவல் அதிகாரிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும், அதிரடியாக ஆணை பிறப்பித்தார்.

இந்நிலையில், 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments