அணு ஆற்றலை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே இந்தியா பயன்படுத்தும்-ஐ.நா.பொதுச்செயலாளருக்கு இந்திய வெளியுறவுத்துறை பதில்

0 1694

அணு ஆற்றலை ஆக்க பணிக்கு மட்டுமே இந்தியா பயன்படுத்தும் என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழித்தல் தினத்தையொட்டி, நடைபெற்ற ஐநா உயர்மட்ட கூட்டத்தில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளிடையே பகைமை, நம்பிக்கையின்மை, பதற்றம் தொடர்கிறது என்றார். உதாரணமாக இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா இடையிலான பிரச்சனைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் அவரது கருத்துக்கு பதில் அளித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியா அணு ஆற்றலை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துமென கூறப்பட்டுள்ளது.

அணுகுண்டுகளை இந்தியா முதலில் பயன்படுத்தாது என்றும், அணு ஆயுதம் இல்லாத நாடுகளுக்கு எதிராக அதனை இந்திய பயன்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments