நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலையே- எய்ம்ஸ் குழு தலைவர்

0 1497
நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலையே: எய்ம்ஸ் குழு தலைவர்

இந்தி நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தற்கொலை என்றும், கொலை இல்லை என்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தலைவரான சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள வீட்டில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி சுசாந்த் சிங் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தது குறித்து ஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவர் குழு தனது அறிக்கையை 29ம் தேதி தாக்கல் செய்யவுள்ளது.

இந்நிலையில் ஆங்கில பத்திரிகைக்கு அக்குழுவின் தலைவரான சுதிர் குப்தா அளித்த பேட்டியில், சுசாந்த் கொலை செய்யப்படவில்லை என உறுதியாக கூறுவதாக தெரிவித்துள்ளார். சுசாந்தின் உடலில் தூக்கிட்டதற்கான காயம் தவிர வேறு காயங்களில்லை, சண்டையிட்டதற்கான அடையாளமில்லை எனவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments