கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க இன்று மீண்டும் செல்லும் ராகுல் மற்றும் பிரியங்கா...

0 1959
கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க இன்று மீண்டும் செல்லும் ராகுல் மற்றும் பிரியங்கா...

உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை ராகுல்காந்தி, பிரியங்கா தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் இன்று சந்தித்துப் பேச உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை ஊடகத் துறையினர் சந்தித்துப் பேச அனுமதிக்கப்படவில்லை. வியாழனன்று ஹத்ராசுக்குச் செல்ல முயன்ற ராகுல்காந்தியும் பிரியங்காவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ராகுல், பிரியங்கா தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சந்தித்துப் பேச உள்ளனர். 

இதனிடையே அந்த ஊருக்குச் செல்லும் வழியில் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments