29 ஆண்டுகள் வளர்த்து பராமரித்த பெண் பயிற்சியாளரை கடித்து துவம்சம் செய்த கொரில்லா

0 8757
29 ஆண்டுகள் வளர்த்து பராமரித்த பெண் பயிற்சியாளரை கடித்து துவம்சம் செய்த கொரில்லா

ஸ்பெயின் நாட்டில் உயிரியல் பூங்காவில் கொரில்லா ஒன்று தன்னை 29 ஆண்டுகள் வளர்த்து பராமரித்த பெண் பயிற்சியாளரை கடித்து துவம்சம் செய்துள்ளது.

மாட்ரிட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் "Malabo" என்ற கொரில்லாவை பிறந்தது முதல் 29ஆண்டுகளாக 46வயதுடைய பெண் பயிற்சியாளர் ஒருவர் அன்புடன் வளர்த்து வந்துள்ளார்.

வழக்கம்போல கொரில்லாவுக்கு உணவு கொடுப்பதற்காக சென்ற போது மூன்று கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியே வந்த கொரில்லா, அந்த பெண்ணை கடித்து துவம்சம் செய்துள்ளது.

190 கிலோ எடையுள்ள அந்த கொரில்லாவிடம் சிக்கிய அந்த பெண்ணின் இரு கைகளும் உடைந்தது மட்டுமின்றி மார்பு மற்றும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments