நான்காண்டு கால லிவ்-இன் ரிலேசன்ஷிப் உறவுக்கு பின்னர் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டில் இருந்து ஜார்கண்ட் நபர் விடுவிப்பு

0 873
நான்காண்டு கால லிவ்-இன் ரிலேசன்ஷிப் உறவுக்கு பின்னர் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டில் இருந்து ஜார்கண்ட் நபர் விடுவிப்பு

நான்காண்டு கால லிவ்-இன் ரிலேசன்ஷிப் உறவுக்கு பின்னர் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டில் இருந்து ஜார்கண்டை சேர்ந்த நபரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி  பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அளித்த புகாரில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நபருக்கு அங்குள்ள கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்தது.

அதனை உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண் சம்பந்தப்பட்ட நபருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவி போல் வாழ்ந்ததாகவும், தனது ஆசைகளை வெளிப்படுத்தி அந்த பெண் எழுதிய கடிதத்தின் மூலம் கத்தி முனையில் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரிய வருவதாகவும் கூறி அந்த நபரை அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments