ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது?உயர்நீதிமன்றம் கேள்வி

0 1582

சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களை அனுமதிப்பதில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வரும் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மீனவர் நலன் அமைப்பு தொடர்ந்த பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு துறைகளில் தளர்வுகள் வழங்கபட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு இல்லை என அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேசமயம் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை வரும் 5ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர்.

அத்துடன் மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் வரும் 5 ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments