சபரிமலை கோவிலில் மண்டலபூஜை முதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு

சபரிமலையில் மண்டல கால பூஜையில் வெளிமாநிலத்தவர் உள்பட பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் பங்கேற்க அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்தார்.
நவம்பர் மாதம் தொடங்கும் மண்டலகால பூஜையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்ய முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆன்லைனில் பதிவு செய்பவர்களை மட்டுமே அனுமதிக்கவும், கொரோனா நெகட்டீவ் சான்று உள்ள பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிப்பது என்றும், நெய்யபிஷேகத்துக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும், பக்தர்கள் சன்னிதானத்தில் தங்க அனுமதி இல்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோவிலில் மண்டலபூஜை முதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு #Sabarimala | #MandalaPooja https://t.co/vUwaAQGhBW
— Polimer News (@polimernews) September 29, 2020
Comments