தீவிரமடைந்துள்ள ஆர்மீனியா -அஜர்பைஜான் போர்.. 2வது நாளாக தொடரும் தாக்குதல்..!

0 3869
தென்மேற்காசிய நாடுகளான ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையேயான போரில் ஆர்மீனிய ராணுவ தளபதி உள்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தென்மேற்காசிய நாடுகளான ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையேயான போரில் ஆர்மீனிய ராணுவ தளபதி உள்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

1991 ஆம் ஆண்டு சோவியத்தில் இருந்து பிரிந்த ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே, எல்லையில் உள்ள நாகோர்னோ, காராபாக் பிராந்தியங்கள் தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்தது.

இந்த நிலையில், ஸ்டீபனகெர்ட் உள்ளிட்ட ஆர்மீனியா பகுதிகளில் மக்களை குறிவைத்து அஜர்பைஜான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக அஜர்பைஜானுக்கு சொந்தமான 3 ராணுவ வாகனங்கள், ஆளில்லா ட்ரோன்கள், 2 ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக ஆர்மீனியா அரசு தெரிவித்ததுடன் அது குறித்த வீடியோவை வெளியிட்டது.

இதையடுத்து இருநாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வான் வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல்கள் 2வது நாளாக தொடர்கிறது.

இதில், ஆர்மீனிய ராணுவ தளபதி உள்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் வசிக்கும் ஆர்மீனியா மற்றும் முக்கிய முஸ்லீம் நாடான அஜர்பைஜானும் போரை நிறுத்த சீனா மற்றும் ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments