அமெரிக்க அதிபர் டிரம்பும் - வருமான வரி சர்ச்சையும்..!

0 781
டிரம்ப், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட 2017 இல் இந்தியாவில் உள்ள தமது தொழில் தொடர்பான வருமானத்திற்கு அவர் சுமார் ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிரம்ப், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட 2017 இல் இந்தியாவில் உள்ள தமது தொழில் தொடர்பான வருமானத்திற்கு அவர் சுமார் ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே காலகட்டத்திற்கு அவர் அமெரிக்காவில் 55 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே வருமான வரி செலுத்தினார் என தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதன் பின்னர் அவர் மேலும் 55 ஆயிரத்து 500 ரூபாயை வருமான வரியாக செலுத்தியதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

கடந்த 15 ஆண்டுகளில் 10 முறை டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை என்றும், அதற்கு தொழில் நஷ்டத்தை அவர் காரணமாக காட்டினார் எனவும் செய்திகள் வெளியாகின. அவற்றை டிரம்ப் தரப்பு மறுத்துள்ளது. இதனிடையே, தனது வருமான வரி விவரங்களை வெளியிட வலியுறுத்தியவர்கள் மீது டிரம்ப் நீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments