ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளி இறந்ததாக எழுந்த புகாருக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்ட மறுப்பு

0 759
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளி ஒருவர் இறந்ததாக எழுந்துள்ள புகாரை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளி ஒருவர் இறந்ததாக எழுந்துள்ள புகாரை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

திருவொற்றியூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற அந்த 57 வயது நபர், கடந்த 16ஆம் தேதி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை மாலை கொரோனா நெகட்டிவ் என வந்த பிறகு அவரை வேறு வார்டுக்கு மாற்றியதாகவும் அப்போது ஆக்சிஜன் கிடைக்காமல் அவர் இறந்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனை மறுத்துள்ள மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, ஆக்சிஜன் கிடைக்காமல் சுப்பிரமணியன் இறக்கவில்லை என்றும் வேறு சில துணை நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர் அதன் தீவிரத்தாலேயே இறந்தார் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments